ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

பாதுகாப்பான மேகச் சேமிப்பகம், அரட்டை மற்றும் சந்திப்புகள் MEGA என்பது பயனரின் கட்டுப்பாட்டில் உள்ள முனை முதல் முனை வரையிலான மறையாக்கத்தையும் தாராளமான இலவசச் சேமிப்பிடத்தையும் வழங்கும் பாதுகாப்பான மேகச் சேமிப்பு மற்றும் தகவல்தொடர்புச் சேவையாகும். பிற மேகச் சேமிப்பக வழங்குநர்களைப் போலல்லாமல், உங்கள் தரவு உங்கள் கிளையன்ட் சாதனங்களால் மட்டுமே மறையாக்கம் செய்யப்பட்டு மறைவிலக்கப்படுகிறது; எங்களால் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. ஏற்றும் நேரத்தைக் குறைக்கவும், பதிவிறக்கச் செயல்திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் உங்கள் உலாவியில் MEGA-ஐ நிறுவ இந்த நீட்டிப்பு உதவுகிறது. எந்த MEGA URL-ஐயும் இந்த நீட்டிப்பு இடைமறித்து உங்கள் சாதனத்திலேயே கையாளும் (எங்கள் சேவையகங்களிலிருந்து JavaScript எதுவும் ஏற்றப்படாது). MEGA-வின் மூல நிரல் கோப்புகள் (HTML, CSS மற்றும் JavaScript) நீட்டிப்பிலிருந்தே ஏற்றப்படுகின்றன; அவற்றின் முழுமையைச் சரிபார்க்கக் கூடுதல் சோதனை தேவையில்லை. நீங்கள் MEGA இணையதளத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு முறையும் இந்தக் கோப்புகளை MEGA சேவையகங்களிலிருந்து பதிவிறக்கிச் சரிபார்க்க வேண்டியதில்லை என்பதால் நேரம் மிச்சமாகிறது. இயக்கக்கூடிய கிளையன்ட் நிரல் குறியீடு TLS/SSL வழியாக MEGA-விலிருந்து ஏற்றப்படுவதற்குப் பதிலாக, பயனரின் உள்ளூர் கணினியிலிருந்தே நேரடியாக இயங்குகிறது. உலாவி நீட்டிப்பின் புதுப்பிப்புகள் மறையியல் முறையில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு, https://mega.io/SecurityWhitepaper.pdf என்ற முகவரியில் உள்ள எங்கள் வெள்ளை அறிக்கையின் பிரிவு 2.2-ஐப் பார்க்கவும். பாதுகாப்பு ஆய்வாளர்கள் எங்கள் மூல நிரல் குறியீட்டை https://mega.io/sourcecode என்ற முகவரியில் காணலாம்.