Trends Everywhere - Never miss a trend
ID
blilbgcjmmpbcjiopbifnoopnpfhdipgஒவ்வொரு தேடலிலும் தற்போதைய இணையப் போக்குகளைத் தரவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள் கண்காணிக்க எளிய வழி
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
ஒவ்வொரு தேடலிலும் தற்போதைய இணையப் போக்குகளைத் தரவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள் கண்காணிக்க எளிய வழி
தற்போதைய இணையப் போக்குகளைத் தரவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள் கண்காணிக்க எளிய வழி.
Trends Everywhere-ன் Chrome நீட்டிப்பு, இணையத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு Google தேடலிலும் போக்கு விளக்கப்படத்தைச் சேர்க்கிறது. இதனால் போக்குகளைக் கண்காணித்து, புதிய வாய்ப்புகளை எப்போதும் அறிந்திருக்கலாம்.
நீங்கள் துணிகர முதலீட்டாளராகவோ, சந்தைப்படுத்துபவராகவோ, SEO நிபுணராகவோ, முதலீட்டாளராகவோ, தலைமை நிர்வாக அதிகாரியாகவோ அல்லது வணிக மாணவராகவோ இருந்தாலும், தற்போதைய இணையப் போக்குகளைத் தொடர்ந்து அறிவது மிகவும் முக்கியம். இந்த நீட்டிப்பு உங்களுக்கானது.
★ இணக்கத்தன்மை ★
Google Search மற்றும் Duck Duck Go-வில் செயல்படும்
★ மொழிகள் ★
அரபு, ரஷ்ய, சீன, கொரிய மற்றும் ஹீப்ரு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் செயல்படும்.
★ உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம் ★
உங்கள் தேடல்கள் எப்போதும் SSL மூலம் குறியாக்கம் செய்யப்படுகின்றன. உங்கள் தேடல்களை நாங்கள் சேமிப்பதில்லை; நீங்கள் பார்வையிடும் இணையதளங்களைக் கண்காணிப்பதுமில்லை. மேலும், உங்கள் தரவை விளம்பரதாரர்களுக்கோ பிற மூன்றாம் தரப்பினருக்கோ ஒருபோதும் விற்க மாட்டோம்.
★ Trends Everywhere பற்றி மேலும் அறிய ★
எங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளமான https://trendseverywhere.com ஐப் பார்வையிடவும்
★ அனுமதிகள் ★
மற்ற நீட்டிப்புகளைப் போலவே நாங்களும் சரியாகச் செயல்படச் சில அனுமதிகள் தேவை:
"Hosts": பல மொழிகளிலும் பகுதிகளிலும் Google பக்கத்தில் எங்கள் அழகிய விளக்கப்படத்தைச் சேர்க்க இந்த அனுமதி உதவுகிறது.
"Tabs": Google தேடல் பக்கத்தில் எங்கள் அழகிய விளக்கப்படத்தைச் சேர்க்க, தாவலின் உள்ளடக்கத்தைப் பெற இந்த அனுமதி தேவை.
பயன்பாட்டு விதிமுறைகள்: https://trendseverywhere.com/terms