ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

மிகக் குறைந்த நினைவகம் மற்றும் CPU பயன்பாட்டுடன் பிணையக் கோரிக்கைகளை வடிகட்டும் திறன்மிக்க கருவி. இது uBlock Origin இன் அதிகாரப்பூர்வ உருவாக்கப் பதிப்பு. கடைசியாக வெளியான நிலையான பதிப்புக்குப் பிறகு செய்யப்பட்ட புதிய திருத்தங்களைச் சோதிக்கவும், முன்பு சரியாக இயங்கியவற்றில் புதிதாக ஏற்படும் பிழைகளைக் கண்டறியவும் உதவ விரும்பினால், uBlock Origin இன் இந்த உருவாக்கப் பதிப்பைப் பயன்படுத்துங்கள். முன்பு சரியாக இயங்கியவற்றில் ஏற்படும் பிழைகளை uBlock Origin இன் சிக்கல் கண்காணிப்பில் தெரிவியுங்கள்: https://github.com/gorhill/uBlock/issues முக்கியம்: இந்த உருவாக்கப் பதிப்பை நிறுவுவதன் மூலம் பங்களிக்க விரும்பினால், புதிய சிக்கல் அறிக்கையைத் தொடங்குவதற்கு முன் உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்யுங்கள்: https://github.com/gorhill/uBlock/blob/master/CONTRIBUTING.md “uBlock Origin dev build”, “uBlock Origin” இன் நிலையான பதிப்புடன் எந்த அமைப்புகளையும் பகிர்வதில்லை. அவை இரண்டு தனித்தனி நீட்டிப்புகளாக நிறுவப்படுகின்றன. தேவைப்பட்டால், இந்த இரண்டு நீட்டிப்புகளுக்கும் இடையில் அமைப்புகளை மாற்றுவதற்கு uBlock Origin இன் காப்புப்பிரதி/மீட்டமைப்பு வசதியைப் பயன்படுத்துங்கள். *** uBlock Origin இன் நிலையான பதிப்பு இங்கே கிடைக்கிறது: https://chrome.google.com/webstore/detail/ublock-origin/cjpalhdlnbpafiamejdnhcphjbkeiagm