Pixlr Editor
ID
icmaknaampgiegkcjlimdiidlhopknpkPixlr Editor என்பது உங்கள் அனைத்துப் படத் திருத்தத் தேவைகளுக்குமான உலாவிப் புகைப்படத் திருத்தி. அடுக்குகள் மற்றும் விளைவுகள் உட்பட, உங்கள் படங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துங்கள்.
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
Pixlr Editor என்பது உங்கள் அனைத்துப் படத் திருத்தத் தேவைகளுக்குமான உலாவிப் புகைப்படத் திருத்தி. அடுக்குகள் மற்றும் விளைவுகள் உட்பட, உங்கள் படங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துங்கள்.
Pixlr Editor என்பது மேம்பட்ட இணையவழிப் புகைப்படத் திருத்திகளில் மிகவும் பிரபலமானது. எதையும் பதிவிறக்கத் தேவையில்லை, இது 100% இலவசம்.
Gimp, PaintShop Pro அல்லது Photoshop பயன்படுத்திப் பழகியிருந்தால், இந்த இணையவழிப் படத் திருத்தியையும் பழகிய ஒன்றைப் போலவே உணர்வீர்கள். கணினியில் நிறுவிப் பயன்படுத்தும் வரைகலை வடிவமைப்புச் செயலிகளில் பொதுவாகக் காணும் பல அம்சங்கள் இதில் உள்ளன. பதிவு செய்ய வேண்டிய அவசியமின்றி உடனே இந்தக் கருவியைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
• கணக்கு தேவையில்லை. விரும்பினால், இலவச சேமிப்பிடத்தைப் பெற ஒரு கணக்கை உருவாக்குங்கள்.
• தனியாக எதையும் பதிவிறக்கவோ நிறுவவோ தேவையில்லை. தேவைப்படும்போது உங்கள் உலாவியில் இதைத் திறந்தால் போதும்.
• அடுக்குகள், எல்லையை வரைந்து பகுதியைத் தேர்ந்தெடுக்கும் கருவி, தூரிகைக் கட்டுப்பாடுகள், படத்தின் பகுதிகளை நகலெடுக்கும் வசதி மற்றும் வடிப்பான்கள் போன்ற கருவிகளை வழங்குகிறது.
• உங்கள் புகைப்படங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் சேமிக்கக்கூடிய தனிப்பட்ட Pixlr Library வசதியை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம்.
கண்களின் சிவப்பைக் குறைத்தல், சிறு கறைகளை நீக்கும் கருவி, வரையும் கருவிகள், படத்தின் பகுதிகளை நகலெடுக்கும் கருவிகள், கூர்மையாக்குதல், மங்கலாக்குதல் மற்றும் பல கருவிகள் உள்ளன.
HDR போன்ற தோற்றம், கவர்ச்சியான ஒளிர்வு, டில்ட்-ஷிஃப்ட் விளைவு, காஸியன் மங்கலாக்கம், விளிம்புகளை இருட்டாக்குதல், துகள்கள் சேர்த்தல் மற்றும் பல வடிப்பான்கள் உள்ளன.
ஒளிநிலைகள், வளைவுகள், வேறு வகைப் படச்சுருளுக்கான ரசாயனங்களால் கழுவிய தோற்றம், வண்ணச் செறிவை நீக்குதல், தானியங்கி ஒளிநிலைகள், வண்ணச்சாயல்/வண்ணச் செறிவு மற்றும் பிரகாசம்/மாறுபாடு போன்ற மேம்பட்ட சரிசெய்தல் வசதிகள் உள்ளன.