Save to Facebook
ID
jmfikkaogpplgnfjmbjdpalkhclendgdபிறகு மீண்டும் பார்க்க விரும்புபவற்றைச் சேமியுங்கள்.
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
பிறகு மீண்டும் பார்க்க விரும்புபவற்றைச் சேமியுங்கள்.
நேரமில்லையா? பிரச்சினையில்லை
பார்க்கவோ நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரவோ விரும்பும் நகைச்சுவை வீடியோ, உடற்பயிற்சி, சமையல் குறிப்பு அல்லது கட்டுரையைக் கண்டீர்களா, ஆனால் நேரமில்லையா? Chrome-க்கான Save to Facebook நீட்டிப்பால் இணையத்தில் காணும் இத்தகைய சுவாரசியமானவற்றைச் சேமித்து, பிறகு எளிதாகக் கண்டறியலாம்.
ஒழுங்குபடுத்துங்கள்
இணையத்திலிருந்து ஓர் உருப்படியை Facebook-இல் சேமிக்கும்போது, தொகுப்புத் தேர்வுகளைக் காட்டி அதை ஒழுங்குபடுத்த உதவுகிறோம். உருப்படியை ஏற்கெனவே உள்ள தொகுப்பில் சேருங்கள் அல்லது புதிய தொகுப்பை உருவாக்குங்கள்—பிறகு பார்க்கவோ பகிரவோ தயாராகும்போது எளிதாகக் கண்டுபிடிக்கலாம். விரும்பும் எண்ணிக்கையில் தொகுப்புகளை உருவாக்கி, விரும்பிய பெயர்களைச் சூட்டலாம்.
உங்களுக்கு மட்டும் (நீங்கள் பகிரும்வரை)
சேமித்த உருப்படிகளை நீங்கள் மட்டுமே பார்க்கவும் அணுகவும் முடியும்; அவை உங்களுக்கான தனிப்பட்ட சேமித்த உருப்படிகளின் பட்டியலில் இருக்கும். அங்கிருந்து உங்கள் காலவரிசையிலோ, குழுவிலோ அல்லது Facebook-இன் வேறு இடங்களிலோ அவற்றைப் பகிரலாம். பகிரப்பட்ட தொகுப்புகள் அம்சத்தின் மூலம் சேமித்த உருப்படிகளின் முழுத் தொகுப்பையும் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிரலாம்.
எங்கிருந்தும் சேமித்தவற்றைப் பாருங்கள்
உலாவியில் எங்கு சென்றாலும், Facebook-இல் சேமித்த உருப்படிகளையும் தொகுப்புகளையும் விரைவாக அணுகலாம். Save to Facebook ஐகானைக் கிளிக் செய்து, மேல் வலது மூலையில் உள்ள “அனைத்தையும் காண்க” இணைப்பைக் கிளிக் செய்தால், சேமித்தவற்றின் பட்டியல் தனிச் சாளரத்தில் திறக்கும்.
அடுத்த முறை வசதியில்லாத நேரத்தில் சுவாரசியமான உள்ளடக்கத்தைக் கண்டால், Save to Facebook நீட்டிப்பைப் பயன்படுத்துங்கள். பார்க்கத் தயாராகும்போது Facebook செய்தியோடையின் இடப்புற மெனுவில் “சேமித்தவை மற்றும் தொகுப்புகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உலாவியில் www.facebook.com/saved எனத் தட்டச்சு செய்யவும்.
Facebook-இல் சேமித்தவை மற்றும் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய https://www.facebook.com/help/516581611792218?helpref=related என்பதைப் பார்க்கவும்.
இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் Facebook-இன் தரவுக் கொள்கையையும் சேவை விதிமுறைகளையும் ஏற்கிறீர்கள். அவை https://www.facebook.com/legal/terms மற்றும் https://www.facebook.com/about/privacy ஆகியவற்றில் கிடைக்கும்.