ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

உங்கள் யோசனைகள் மற்றும் அனுபவங்கள் அனைத்தையும் Evernote இல் சேமித்து, பிறகு நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கணினியிலும் கைப்பேசியிலும் அவற்றை அணுகுங்கள். Evernote என்பது விருதுகளை வென்ற ஒரு சேவையாகும்; நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கணினியையும் கைப்பேசியையும் உங்கள் மூளையின் நீட்சியாக மாற்றுகிறது. உங்கள் யோசனைகள், அனுபவங்கள் மற்றும் உத்வேகங்களைச் சேமிக்க Evernote ஐப் பயன்படுத்துங்கள்; பிறகு அவை அனைத்தையும் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் எளிதாக அணுகுங்கள். உங்கள் நினைவுகளைப் பதிவு செய்யுங்கள் - உங்கள் குறிப்புகள், ஆய்வுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேமியுங்கள் - எதையும் மறந்துவிடாமல் இருக்க பணிப் பட்டியல்களையும் செய்ய வேண்டியவற்றின் பட்டியல்களையும் உருவாக்குங்கள் - Evernote உலாவி நீட்டிப்புகள் மற்றும் செருகுநிரல்களைப் பயன்படுத்தி சுவாரஸ்யமான வலைப்பக்கங்களைச் சேமியுங்கள் - படங்கள், ஒலி, PDF கோப்புகள் மற்றும் பலவற்றை இணைக்கவும்* எல்லாவற்றையும் விரைவாகக் கண்டறியுங்கள் - குறிப்பேடுகள் மற்றும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி உங்கள் குறிப்புகளை ஒழுங்குபடுத்துங்கள் - முக்கியச் சொல் மற்றும் உரை மூலம் குறிப்புகளைத் தேடுங்கள் - தானியங்கிப் படச் செயலாக்கம், புகைப்படங்களில் உள்ள சொற்களைத் தேட உதவுகிறது எங்கிருந்தும் அணுகுங்கள் - நீங்கள் பயன்படுத்தும் அனைத்து வெவ்வேறு பதிப்புகளிலும் உங்கள் குறிப்புகள் அனைத்தும் உடனடியாக ஒத்திசைக்கப்படுகின்றன - Evernote Web மட்டுமின்றி, Windows, Mac, Android, iPhone, iPad, BlackBerry மற்றும் பலவற்றுக்கான Evernote பதிப்புகளையும் www.evernote.com என்ற முகவரியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.