ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

ஆபத்தான இணையதளங்களுக்கான இணைப்புகளை ஒரே பார்வையில் கண்டறியுங்கள். Trend Micro பாதுகாப்பு மென்பொருள் வழங்கும் பாதுகாப்பை மேம்படுத்துங்கள். Trend Micro Toolbar பாதுகாப்பாக இணையத்தில் உலாவவும், மோசடிகள், விளம்பரங்கள், தானாகத் திறக்கும் சாளரங்களைத் தடுக்கவும், இணையத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. கிளவுட் அடிப்படையிலான பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் செயல்படும் இது, தகவல்களைத் திருடும் முயற்சிகள், தீங்கிழைக்கும் இணையதளங்கள், அடையாளத் திருட்டு மற்றும் இணைய மோசடிகளுக்கு எதிராக மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. நீங்கள் பொருட்கள் வாங்கினாலும், வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தினாலும், மின்னஞ்சலைப் பார்த்தாலும் அல்லது சமூக ஊடகங்களில் உலாவினாலும், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க Trend Micro கூடுதல் நிகழ்நேரப் பாதுகாப்பை வழங்குகிறது. அம்சங்கள்*: இணைய அச்சுறுத்தல் பாதுகாப்பு: தீங்கிழைக்கும் இணையதளங்கள், தகவல்களைத் திருடும் இணைப்புகள், தொழில்நுட்ப உதவி வழங்குவதாகக் கூறும் மோசடிகள், வங்கி மோசடிகள் மற்றும் பிற இணைய அச்சுறுத்தல்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் முன்பே அவற்றைத் தடுக்கிறது. மோசடி சரிபார்ப்பு: இணையத்தில் உலாவும்போது சந்தேகத்திற்குரிய உள்ளடக்கத்தை உடனடியாகச் சரிபார்த்து, சாத்தியமான மோசடிகள் அல்லது மோசடிச் செய்திகள் பற்றிய எச்சரிக்கைகளைப் பெறுங்கள். விளம்பரத் தடுப்பான்: இடையூறு ஏற்படுத்தும் விளம்பரங்களையும் தானாகத் திறக்கும் சாளரங்களையும் அகற்றுகிறது. இதனால் இணையதளங்கள் வேகமாக ஏற்றப்படுவதுடன், உங்கள் உலாவல் அனுபவம் ஒழுங்காகவும் கவனச்சிதறல் இல்லாமலும் இருக்கும். மின்னஞ்சல் பாதுகாப்பு: தகவல்களைத் திருடும் முயற்சிகள், மோசடிச் செய்திகள் மற்றும் ஏமாற்று மின்னஞ்சல்களைக் கண்டறிய உங்கள் இணைய மின்னஞ்சலை (Gmail, Outlook.com, Yahoo Mail) ஸ்கேன் செய்கிறது. Pay Guard: உங்கள் இணைய வங்கிச் சேவைகளையும் நிதிப் பரிவர்த்தனைகளையும் மோசடி மற்றும் அடையாளத் திருட்டிலிருந்து பாதுகாக்க Trend Micro டெஸ்க்டாப் செயலியுடன் இணைந்து செயல்படுகிறது. எவற்றிலிருந்து உங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் இணைய மோசடிகள் தகவல்களைத் திருடும் தாக்குதல்கள் தீங்கிழைக்கும் இணையதளங்கள் வங்கி மற்றும் பொருட்கள் வாங்குவதில் நடக்கும் மோசடிகள் அடையாளத் திருட்டு மின்னஞ்சல் மோசடிகள் குறிப்பு: சில அம்சங்களுக்கு Trend Micro கணக்கும் செயலில் உள்ள சந்தாவும் தேவை. இன்றே Trend Toolbar-ஐ நிறுவி, மேலும் பாதுகாப்பான, வேகமான, கூடுதல் பாதுகாப்புள்ள உலாவலை அனுபவியுங்கள். கேள்விகள் உள்ளனவா? எங்கள் ஆதரவு இணையதளத்திற்குச் சென்று தொடர்புகொள்ளுங்கள்:https://helpcenter.trendmicro.com/en-us/product-support/security-for-chrome/