ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

நீங்கள் இணையத்தில் உலாவும்போது இணைய அச்சுறுத்தல்களிலிருந்து Norton Safe Web பாதுகாப்பு வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் தேடும்போது, பொருட்கள் வாங்கும்போது அல்லது உலாவும்போது ஆபத்தான தளங்கள் குறித்து எச்சரிப்பதன் மூலம் அடையாளத் திருட்டு மற்றும் இணைய மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க Norton Safe Web உதவுகிறது. சமீபத்திய அச்சுறுத்தல் தகவல்களுடன் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் Norton நிறுவனத்தின் Remote URL Reputation Service சேவையிடம் தகவல் கேட்டு, நீங்கள் ஏற்றும் ஒவ்வொரு பக்கத்திற்கும் Norton Safe Web பாதுகாப்புத் தகவலை வழங்குகிறது. உங்களுக்குப் பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்க, தீங்கிழைக்கும் பக்கங்களையும் பதிவிறக்கங்களையும் Norton Safe Web தானாகத் தடுக்கிறது. --- இந்த நீட்டிப்பிற்குள் தேவையான செயல்பாடுகளைச் செய்வதற்காக, பின்வரும் Chrome செய்திகளைத் தோன்றச் செய்யும் அனுமதிகளை இந்த நீட்டிப்பு பயன்படுத்துகிறது. “நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் உள்ள உங்கள் தரவு அனைத்தையும் படிக்கவும் மாற்றவும்” நீங்கள் உலாவும் அனைத்து வகையான பக்கங்களிலும் இணைய ஆபத்துகளைக் கண்டறியத் தேவையான அனுமதிகளுக்காகக் காட்டப்படுகிறது. “உங்கள் உலாவல் வரலாற்றைப் படிக்கவும்” பின்வருவனவற்றுக்குத் தேவையான அனுமதிகளுக்காகக் காட்டப்படுகிறது: - ஆபத்தான உள்ளடக்கம் கண்டறியப்படும்போது, அது தடுக்கப்பட்டதைக் காட்டும் பக்கத்தைக் காண்பித்தல். - Chrome அல்லது பயனர் தாவல்களில் மாற்றங்களைச் செய்யும்போது, தளப் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தகவலை நம்பகமாகக் காண்பித்தல். “உங்கள் பதிவிறக்கங்களை நிர்வகிக்கவும்” தீங்கிழைக்கும் பதிவிறக்கங்களை அகற்றத் தேவையான அனுமதிக்காகக் காட்டப்படுகிறது. “அறிவிப்புகளைக் காண்பிக்கவும்” பாதுகாப்புச் செயல்பாட்டில் முக்கியமான மாற்றங்கள் நிகழும்போது அல்லது சில அம்சங்களுக்கு அடையாளச் சரிபார்ப்பு தேவைப்படும்போது எச்சரிக்கைகளைக் காட்டத் தேவையான அனுமதிகளுக்காகக் காட்டப்படுகிறது. “புதிய பின்னணிச் செயலி சேர்க்கப்பட்டது கணினி தொடங்கும்போது Norton Safe Web தொடங்கும். மற்ற எல்லா Google Chrome சாளரங்களையும் நீங்கள் மூடிய பிறகும் அது பின்னணியில் தொடர்ந்து இயங்கும்.” தொடங்கும் நேரத்தைக் குறைப்பதற்காக நீட்டிப்பைத் தொடர்ந்து இயங்க வைக்கப் பயன்படுத்தப்படும் அனுமதிக்காகக் காட்டப்படுகிறது. இந்த நீட்டிப்பிற்குள் சில செயல்பாடுகளைச் செய்வதற்காக, Chrome இல் காட்டப்படாத அனுமதிகளையும் இந்த நீட்டிப்பு பயன்படுத்துகிறது: “webRequest” மற்றும் “webRequestBlocking” அனுமதிகள் பின்வருவனவற்றுக்குத் தேவை: - சில அச்சுறுத்தல்களைத் தடுக்க உதவுவதற்காக, இணையதளங்களில் உலாவும்போது கீழ்நிலைத் தரவுகளை அணுகுதல். - சில அம்சங்களுக்கு அடையாளச் சரிபார்ப்பைச் செய்தல். “storage” அனுமதி நீட்டிப்பு பயன்படுத்தும் அமைப்புத் தரவைச் சேமிக்கவும் மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. --- --- இந்தத் துணை நிரலைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் உரிமம் மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை (https://www.nortonlifelock.com/content/dam/nortonlifelock/pdfs/eulas/licensing-agreement/customer-agreement-en.pdf) ஏற்றுக்கொள்கிறீர்கள்; மேலும், எங்கள் உலகளாவிய தனியுரிமை அறிக்கையைப் (https://www.nortonlifelock.com/us/en/privacy/global-privacy-statement/) படித்துள்ளீர்கள் என்றும் அதை அறிந்துகொண்டுள்ளீர்கள் என்றும் உறுதிப்படுத்துகிறீர்கள். முக்கியமான பிழைகள் மற்றும் அம்சங்களின் பயன்பாடு குறித்த தகவல்களை Google Analytics சேவைகளுக்கு அனுப்ப, இந்தத் துணை நிரல் Google Analytics இன் Measurement Protocol ஐப் பயன்படுத்துகிறது. இந்தத் துணை நிரலைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் NortonLifeLock, Google Analytics சேவைகளைப் பயன்படுத்துகிறது. ஆனால் அந்தச் சேவைகளை NortonLifeLock இயக்குவதில்லை. இந்தத் தரவு சேகரிப்பிற்கும் பயன்பாட்டிற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இந்தத் துணை நிரலை நிறுவ வேண்டாம்; ஏற்கெனவே நிறுவியிருந்தால் அதை அகற்றவும். Google Analytics தரவைச் செயலாக்கும்போது உங்கள் IP முகவரியை மறைப்பதற்காக Google வழங்கும் அளவுருக்களை இந்தத் துணை நிரல் அமைக்கிறது. Google Analytics ஐப் பயன்படுத்துவதில் எங்களுக்குள்ள கடமைகள், Google இன் தனியுரிமை நடைமுறைகள் மற்றும் IP முகவரியை மறைப்பதற்கு Google வழங்கும் ஆதரவு குறித்த கூடுதல் விவரங்களை இங்கே காணலாம்: - https://developers.google.com/analytics/policy - https://support.google.com/analytics/answer/6004245 - https://support.google.com/analytics/answer/2763052 பதிப்புரிமை © 2021 NortonLifeLock Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. NortonLifeLock, NortonLifeLock சின்னம், Checkmark சின்னம், Norton, LifeLock மற்றும் LockMan சின்னம் ஆகியவை அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் NortonLifeLock Inc. அல்லது அதன் இணை நிறுவனங்களின் வர்த்தக முத்திரைகள் அல்லது பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரைகள் ஆகும். Google Chrome என்பது Google, LLC இன் வர்த்தக முத்திரையாகும். பிற பெயர்கள் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாக இருக்கலாம்.