Desmos Graphing Calculator
ID
bhdheahnajobgndecdbggfmcojekgdkoஅழகான, ஆற்றல்மிக்க, இலவசமான கணித ஆராய்ச்சி! desmos.com வழங்குகிறது
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
அழகான, ஆற்றல்மிக்க, இலவசமான கணித ஆராய்ச்சி! desmos.com வழங்குகிறது
Desmos மூலம் கணிதத்தை ஆராயுங்கள்! சார்புகளை வரையுங்கள், அட்டவணைகளை உருவாக்குங்கள், நகர்த்திகளைச் சேருங்கள், உங்கள் வரைபடங்களை அசைவூட்டுங்கள், இன்னும் பலவற்றைச் செய்யுங்கள் -- அனைத்தும் இலவசம்.
Desmos ஆகிய நாங்கள், அனைவருக்கும் கணித அறிவு உள்ள ஓர் உலகையும், அனைத்து மாணவர்களும் கணிதத்தை எளிதாக அணுகி மகிழ்ந்து கற்கக்கூடிய ஓர் உலகையும் கற்பனை செய்கிறோம். செய்து கற்பதே இதற்கான திறவுகோல் என்று நம்புகிறோம்.
இந்தக் கனவை நனவாக்க, அடுத்த தலைமுறை வரைபடக் கணிப்பானை உருவாக்குவதில் தொடங்கியுள்ளோம். எங்களின் ஆற்றல்மிக்க, அதிவேகக் கணித இயந்திரத்தைப் பயன்படுத்தி, நேர்கோடுகள் மற்றும் பரவளையங்கள் முதல் வகைக்கெழுக்கள் மற்றும் Fourier தொடர்கள் வரை எந்தச் சமன்பாட்டையும் இந்தக் கணிப்பானால் உடனடியாக வரைய முடியும். சார்புகளின் உருமாற்றங்களை விளக்குவது நகர்த்திகளால் மிகவும் எளிதாகிறது. இது எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய, அழகான கணிதம். எல்லாவற்றிலும் சிறப்பானது: இது முற்றிலும் இலவசம்.
அம்சங்கள்:
வரைபடம் வரைதல்: துருவ, கார்ட்டீசியன் அல்லது அளபுரு வரைபடங்களை வரையுங்கள். ஒரே நேரத்தில் எத்தனை கோவைகளை வரையலாம் என்பதற்கு வரம்பில்லை - கோவைகளை y= வடிவத்தில் உள்ளிட வேண்டிய அவசியம்கூட இல்லை!
நகர்த்திகள்: கணிதத்தை இயல்பாகப் புரிந்துகொள்ள மதிப்புகளை நேரடியாக மாற்றிப் பாருங்கள், அல்லது எந்த அளபுருவையும் அசைவூட்டி, அது வரைபடத்தில் ஏற்படுத்தும் விளைவைப் பாருங்கள்
அட்டவணைகள்: தரவை உள்ளிட்டு வரைபடமாக வரையுங்கள், அல்லது எந்தச் சார்புக்கும் உள்ளீடு-வெளியீட்டு அட்டவணையை உருவாக்குங்கள்
புள்ளியியல்: தரவுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும் நேர்கோடுகள், பரவளையங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறியுங்கள்.
பெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதல்: இரண்டு விரல்களைக் குவித்து அல்லது விரித்து அச்சுகளின் அளவுகளைத் தனித்தனியாகவோ ஒரே நேரத்திலோ மாற்றுங்கள், அல்லது விரும்பிய காட்சிப் பகுதியைப் பெற சாளரத்தின் அளவைக் கைமுறையாக மாற்றுங்கள்.
முக்கியப் புள்ளிகள்: அதிகபட்சங்கள், குறைந்தபட்சங்கள் மற்றும் வெட்டுப்புள்ளிகளைக் காட்ட ஒரு வளைவைத் தொடுங்கள். சாம்பல் நிற முக்கியப் புள்ளிகளின் ஆயத்தொலைவுகளைக் காண அவற்றைத் தட்டுங்கள். ஒரு வளைவின் மீது விரலை அழுத்திப் பிடித்து இழுத்து, உங்கள் விரலுக்குக் கீழே ஆயத்தொலைவுகள் மாறுவதைப் பாருங்கள்.
அறிவியல் கணிப்பான்: நீங்கள் தீர்க்க விரும்பும் எந்தச் சமன்பாட்டையும் தட்டச்சு செய்யுங்கள்; Desmos விடையைக் காட்டும். வர்க்கமூலங்கள், மடக்கைகள், தனிமதிப்பு மற்றும் பலவற்றை இது கையாளும்.
சமனிலிகள்: கார்ட்டீசியன் மற்றும் துருவச் சமனிலிகளை வரையுங்கள்.
மேலும் அறிய www.desmos.com ஐப் பார்வையிடுங்கள்.