ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொண்ட மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வரைபட மென்பொருள். Lucidchart என்பது வரைபடங்களை விரைவாகவும் எளிதாகவும் வரைய உதவும் இணைய அடிப்படையிலான வரைபடக் கருவி. மாணவர்கள் தங்கள் பாடப் பணிகளைத் தனியாகச் செய்யலாம் அல்லது வரம்பற்ற எண்ணிக்கையிலான சக மாணவர்களுடன் சேர்ந்து நிகழ்நேரத்தில் வரைபடங்களை உருவாக்கவும் திருத்தவும் முடியும் -- குழுத் திட்டப் பணிகளுக்கு மிகவும் ஏற்றது. அனைத்து பிரீமியம் அம்சங்களையும் உள்ளடக்கிய இலவச கல்வி உரிமங்களைப் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் Lucidchart வழங்குகிறது. செயல்விளக்கத்தைத் தொடங்க 'Chrome இல் சேர்' என்பதைக் கிளிக் செய்து, இலவச உரிமத்தைப் பெற அந்தச் செயல்விளக்கத்தில் 'இலவசமாகப் பதிவு செய்க' என்பதைக் கிளிக் செய்யுங்கள். முழுப் பள்ளிக்காகவும் பதிவு செய்ய டொமைன் நிர்வாகிகளும் இதே முறையைப் பின்பற்றலாம். நூற்றுக்கணக்கான வார்ப்புருக்களும் எடுத்துக்காட்டுகளும்: - பாய்வு விளக்கப்படங்கள் - வென் வரைபடங்கள் - தகவலைக் காட்சிப்படுத்தி ஒழுங்கமைக்கும் வரைபடங்கள் - சிந்தனை வரைபடங்கள் - நிறுவன அமைப்பு விளக்கப்படங்கள் - அடிப்படைக் கட்டமைப்பு வரைபடங்கள் / மாதிரி வடிவமைப்புகள் - UML / ERD சக்திவாய்ந்தது, பயன்படுத்த எளிதானது: - நூற்றுக்கணக்கான வடிவங்களிலிருந்து தேர்வுசெய்யுங்கள் - உங்கள் சொந்தப் படங்களை இழுத்து விடுவதன் மூலம் சேருங்கள் - PDF, PNG மற்றும் JPG வடிவங்களில் ஏற்றுமதி செய்யுங்கள் - வலைப்பதிவுகள் அல்லது விக்கிகளில் வரைபடங்களை உட்பொதியுங்கள் - செயல்படும் பகுதிகளையும் நிலைகளையும் கொண்ட ஊடாடும் மாதிரி வடிவமைப்புகள் கூட்டுப் பணி: - மாற்றங்கள் உடனடியாக ஒத்திசைக்கப்படும் நிகழ்நேரக் கூட்டுப் பணி - ஒரே நேரத்தில் கூட்டாகப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பில்லை - முழுமையான திருத்த வரலாற்றுடன் சக்திவாய்ந்த பதிப்புக் கட்டுப்பாடு மதிப்புரைகள்: FreeTech4Teachers.com: “பல அம்சங்களைக் கொண்ட ஒரு சிக்கல் அல்லது கருத்தின் பகுதிகளைக் காட்சிப்படுத்திப் புரிந்துகொள்ள, விளக்கப்படம் உருவாக்கும் செயல்முறை மாணவர்களுக்கு உதவும். மாணவர்கள் விளக்கப்படங்களை உருவாக்கவும் அவற்றைப் பகிரவும் Lucidchart எளிதாக்குகிறது.” TeachingHistory.org: “இணைய அடிப்படையிலான, தெளிவான இடைமுகம், வெளியிடுவதற்கான வரைபடங்களையும் பாய்வு விளக்கப்படங்களையும் கூட்டாக உருவாக்க உதவுகிறது. வேகமாகச் செயல்படுவதாலும், எளிதாகக் கற்றுக்கொள்ள முடிவதாலும், கூட்டாகப் பணியாற்ற உதவுவதாலும் இந்தக் கருவியை நான் பரிந்துரைக்கிறேன்.”